தமிழக காங்கிரஸ் தலைவர் கேஸ் அழகிரி திடீரென கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருடைய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
ரயில் மறியல் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து அவர் கூறியபோது ’பின் வாசல் வழியாக ராகுல் காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவதை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் தெரிவித்தார்
நரேந்திர மோடி உண்மையிலேயே அரசியல்வாதி என்றால் தேர்தலில் ராகுல் காந்தியிடம் மோதுங்கள் என்றும் ராகுல் காந்தி தான் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்