Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்; முத்தூட் பைனான்சில் கொள்ளை!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:24 IST)
கிருஷ்ணகிரியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கிளையில் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகைகளின் பேரில் அடகு கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் கிளை நிறுவனத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் வாட்ச்மேனை மிரட்டி உள்ளேயிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மொத்தமாக ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்; சிறுவன் பலியால் பரபரப்பு!