அயோத்தி தீர்ப்பு எதிரொலி: கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு விடுமுறை!

சனி, 9 நவம்பர் 2019 (09:35 IST)
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக – கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வெளியாக இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அயோத்தி தீர்ப்பு யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரலாம்: டாக்டர் ராமதாஸ் கருத்து