Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலர் தற்கொலை முயற்சி – காரணம் சக காவலரா ?

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:00 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் சக காவலர் காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி எனும் பகுதியை அடுத்த பாணுரங்கன் தொட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா. இவர், திருப்பூர் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சக காவலரான கண்ணன் என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் நெருங்கிப் பழகியதால் நதியா கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இவர்கள் காதலுக்கு இருவரின் பெற்றோர் தரப்பிலும் எந்தவித எதிர்ப்பும் இல்லையென சொல்லப்படுகிறது. அதனால் திருமணம் செய்துகொள்ளலாம் என நதியா கூறியுள்ளார். ஆனால் அதற்குக் கண்ணன் சம்மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நதியா நேற்று (நவம்பர் 4) எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவ ஆரம்பித்ததை அடுத்து காவல் அதிகாரிகள் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments