Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மூடு விழா நடத்திய கொரோனா?

Webdunia
திங்கள், 4 மே 2020 (13:00 IST)
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழியாக கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
கொரோனாவின் கூடாரமான கோயம்பேடு மார்க்கெட் மூலம் 322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் 131, விழுப்புரம் 76, சென்னை 63, அரியலூர் 42 என கோயம்பேடு கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. 
 
இதனால் கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் உட்பட 7,500 பேரை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. அதோடு கோயம்பேடு காய்கறி சந்தையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனை கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கும் என சிஎம்டிஏ செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்த நிலையில் தற்போது கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments