Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்: கோயம்பேடு வியாபாரிகளின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (07:44 IST)
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைனில் கிடைக்காத பொருளே இல்லை என்ற நிலையில் காய்கறிகளையும் ஆன்லைனில் ஒருசில நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. குறைந்த விலை, டோர் டெலிவரி போன்ற வசதிகளால் பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் காய்கறிகளை வாங்க தொடங்கிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 5 மணி அளவில் கோயம்பேடு காய்கறி வியாபார்கள் திடீர் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து கோயம்பேடு உரிமம் பெற்ற கோயம்பேடு காய்கறிகள் மொத்த வியாபாரிகள் சிலர் கூறியபோது, ‘நிஞ்ஜா கார்ட், உடான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மொத்த விலைக்கு காய்கறியை வாங்கி அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாகவும், விற்பனை செய்தது போக மீதியிருக்கும் சுகாதாரமற்ற பழைய காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் இல்லாத கடைகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் உரிமம் உள்ள 2,200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனை அடுத்து கோயம்பேட்டில் உள்ள 27 வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அலுவலகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு  செய்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments