Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்படுகிறது கோயம்பேடு மார்க்கெட்: ஒரே நாளில் 500க்கும் மேல் கொரோனா எதிரொலி

Webdunia
திங்கள், 4 மே 2020 (18:22 IST)
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 527 பேர்களில் சுமார் 400க்கு மேல் கோயம்பேடு தொடர்புடையவர்களாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் வெளி வரவில்லை 
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாததால் உடனடியாக அந்த மார்க்கெட்டை மூட வேண்டும் என்று கடந்த சில நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை அடுத்து தற்போது கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுவதாகவும், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
கோயம்பேடு மார்க்கெட்டால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments