Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.. கோயம்பேடு வணிக வளாகத்தில் சோதனை..!

Siva
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (09:02 IST)
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிரடி சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது மாம்பழ சீசன் ஆரம்பமாகியுள்ளதை அடுத்து கடைகளில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது

இந்த நிலையில் இன்று திடீரென கோயம்பேடு வணிக வளாக பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் அவ்வாறு பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் வியாபார நோக்கத்திற்காக பல கடைகளில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தான் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் குறித்து வியாபாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அதே நேரத்தில் எல்லா வியாபாரிகளும் அவ்வாறு செய்வதில்லை என்றும் ஒரு சில வியாபாரிகள் செய்யும் தவறால் அனைத்து வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும் வியாபாரிகள் மத்தியில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments