கிளாம்பாக்கத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்துதான் இனி தென் மாவட்ட பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தற்போது சென்று கொண்டிருந்தாலும் இன்னும் ஒரு வருடத்தில் அதுவும் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் புதிய சட்டசபை கட்டிடமாக மாறலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இடத்தில் 40 மாடி கொண்ட சர்வதேச ஐடி நிறுவனம் ஒன்று வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பாலங்கள் கட்டி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் இங்கே புதிய சட்டசபை கட்டிடம் அல்லது சர்வதேச ஐடி நிறுவனத்தின் கட்டிடம் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.