Publish Date: Mon, 02 Nov 2020 (10:23 IST)
Updated Date: Mon, 02 Nov 2020 (10:47 IST)
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் அதிகளவில் கொரோனா தொற்று நோயாளிகள் அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கலந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டது.
இதையடுத்து 7 மாதத்துக்கு பிறகு இப்போது மீண்டும் கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் திறக்கப்ப்ட்டுள்ளது.