Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அப்பல்லோவில் ரோசய்யா கூறியதாவது......’

’அப்பல்லோவில் ரோசய்யா கூறியதாவது......’
, சனி, 15 அக்டோபர் 2016 (06:12 IST)
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வரை அவரது தோழி சசிகலா அருகில் இருந்து கவனித்து வருகிறார்.


 
 
முதலமைச்சரின் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக லண்டன் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்துள்ளனர். 
 
முதல்வர் உடல்நலம் குறித்து அறிய அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பக்கத்து மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனை வளாகத்தில், ரோசய்யா, கூறியதாவது, “முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திகிறேன், அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்." என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பெண் காவலர் தற்கொலை’ - காதல் ஏமாற்றம்!