Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைகர் முத்துவேல் பாண்டியனுடன் கோலமாவு கோகிலா..? – உருவாகிறது நெல்சன் யுனிவர்ஸ்!

Prasanth Karthick
திங்கள், 22 ஜனவரி 2024 (11:24 IST)
தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பிரபலமாகி வரும் நிலையில் இயக்குனர் நெல்சனும் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனுக்கு கார்களை பரிசளித்ததுடன் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் ஏராளமான பரிசுகளை வழங்கினார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகளில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அதற்கு முன்னதாகவே ரசிகர்கள் பலர் நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இணைத்து ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற ரீதியில் பேசி வந்தனர்.

ALSO READ: ஷகீலா தினமும் குடித்துவிட்டு வந்து…. வளர்ப்பு மகள் ஷீத்தல் பகிர்ந்த தகவல்!

இந்நிலையில் நெல்சன் எழுதும் ‘ஜெயிலர்-2’ கதையில் கோலமாவு கோகிலாவை இணைக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இரண்டு படங்களிலுமே பொதுவான கதாப்பாத்திரமாக உள்ள யோகி பாபுவை வைத்து ஜெயிலருக்குள் நயந்தாராவை கொண்டு வரும் திட்டம் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தாரா எம்ஜிஆர்? - திருமா பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசம்! கட்டிய மனைவியை கட்டிலில் வைத்து பிடித்த கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: பாலஸ்தீனிய கால்பந்து வீரர் பரிதாப பலி..!

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments