ஓபிஎஸ்-ஐ கட்டி வைத்து சொத்துக்களை பறித்த ஜெயலலிதா?: பரவும் அதிர்ச்சி தகவல்!
ஓபிஎஸ்-ஐ கட்டி வைத்து சொத்துக்களை பறித்த ஜெயலலிதா?: பரவும் அதிர்ச்சி தகவல்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலில் இருந்த காவலாளியை கொலை செய்து விட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்ற சம்பவம் நடந்தது.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சந்தேகத்துக்குரிய முறையில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனின் பெயரும் அடிபட்டது. கனகராஜுடன் ஓபிஎஸ்-இன் மகன் தொடர்பில் இருந்ததாகவும், இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் பரவின.
இதனையடுத்து சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு கொலை, கொள்ளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியதாக தகவல்கள் பரவுகிறது.
இந்நிலையில் இந்த கொடநாடு விவகாரத்தில் ஏன் ஓபிஎஸ் அல்லது அவரது மகன் ஈடுபட்டிருக்க வேண்டும் என ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வீட்டிலேயே சிறை வைத்ததாக செய்திகள் பரவின. மு.க.ஸ்டாலின் கூட இது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது வீட்டு சிறையில் கட்டி வைக்கப்பட்ட ஓபிஎஸ்ஸிடம் இருந்து முறைகேடாக சொத்து சேர்த்ததாக கூறி அவர்களின் சொத்து பத்திரங்கள், பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும், அவற்றை கொடநாடு பங்களாவுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்ற தான் தற்போது இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல்கள் பரவுகிறது.