கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த பொருட்கள் மீட்பு: பணம், ஆவணம் மாயம்!
கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த பொருட்கள் மீட்பு: பணம், ஆவணம் மாயம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட வாட்கள், அழகு பொருட்களை சயனின் காரில் இருந்து போலீசார் மீட்டதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட்டில் காவலில் ஈடுபட்டிருந்த காவலாலியை கொலை செய்துவிட்டும் மற்றொரு காவலாளியை தாக்கிவிட்டும் அங்கிருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவதிற்கு ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மூளையாக இருந்ததும், அவரது நண்பர் சயனின் ஏற்பாட்டில் கூலிப்படையினர் இதனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைய சயனும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நடக்க இது திட்டமிட்ட கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது. படுகாயமடைந்த சயனை மருத்துவமையில் சேர்த்து சிகிச்சை அளித்து வரும் போலீசார் அவரது காரை சோதனை செய்து அதில் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர்.
அதில், ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த வாட்சுகள் மற்றும் அழகு பொருட்கள் இருந்தது. மேலும் பலகோடி ரூபாய், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போயுள்ளன. ஆனால் அவை இதுவரை சிக்கவில்லை. அதுபற்றி எந்த தகவலும் இல்லை.
அந்த பங்களாவில் இருந்த பொருட்கள் பற்றி சசிகலா, மற்றும் ஜெயலலிதாவிற்கு மட்டுமே தெரியும் என்பதால் கொள்ளை போன பொருட்கள், ஆவணங்கள் என்ன என்பதை அறிவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் கார் டிரைவர் கனகராஜ் சந்தேகத்துக்குறிய அவகையில் மரணமடைந்ததால் அவரை பின்னணியில் இருந்து யாரவது அரசியல் தலைவர்கள் இயக்கினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.