Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

Advertiesment
Kiss

Prasanth Karthick

, வெள்ளி, 15 நவம்பர் 2024 (14:31 IST)

காதலிக்கும் சமயத்தில் பெண்ணை முத்தமிட்டதற்காக பெண் தொடர்ந்த வழக்கில் காதலன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் பிரிந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தனது காதலன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அதன்படி இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதை எதிர்த்து தன்னுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதுடையவர். அவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சந்தித்துக் கொண்டபோது மனுதாரர் இளம்பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் மனுதாரர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

 

மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கொண்டாலும், டீன் ஏஜ் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டியணைத்துக் கொள்வது மற்றும் முத்தமிடுவது இயல்பானதாகவே உள்ளதால், இதை இந்திய தண்டனை சட்டம் 354 உட்பிரிவின் கீழான குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இந்த வழக்கையும், வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. ஆகவே மனுதாரர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை தூக்கிட்டா 4 நாள்ல ஆஸ்திரேலியா ஜெயிச்சிடும்.. ஆனா..?! - ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர்!