பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதி திட்டத்தில் விவசாயி அல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணம் பெற்று வந்தது பெரம்பலூரில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசால் விவசாயிகளுக்கு நிதியுதவியாக மாதம் தோறும் 6 ஆயிரம் வழங்கப்படும் பிரதம மந்திரியின் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பெரம்பலூரில் சுமார் 1700 பேர் விவசாயம் செய்யாமலே போலியாக விண்ணப்பித்து மாதம் தோறும் பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
1700 பேர் திட்டதொகையான ரூ.6 ஆயிரத்தில் 4 ஆயிரம் வீதம் சுமார் ரூ.68 லட்சம் வரை நிதியாக பெற்றுள்ளனர். ஆனால் ரூ.68 லட்சத்தில் இதுவரை 11 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.