மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

Mahendran
சனி, 1 நவம்பர் 2025 (14:22 IST)
மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா நாளில் அவரை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொல்லி, போற்றுவோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்கா புகழொளியை தமதாக்கி கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!
 
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டு சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கூட்ட நெரிசல்.. பரிதாபமாக பலியான 9 பேர்.. நிவாரண பணிகளுக்கு உத்தரவு..!

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் மக்களாட்சியை அமைப்போம்! விஜய்

24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments