Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலியைக் கொன்று காட்டில் வீசிய காதலன்....திடுக்கிடும் சம்பவம்

Advertiesment
காதலியைக் கொன்று காட்டில் வீசிய  காதலன்....திடுக்கிடும் சம்பவம்
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (19:44 IST)
புதுகோட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியைக் கொன்று நாடகமாடிய காதலனை போலீஸார கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் உள்ள கறம்பக்குடியில் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் சண்முகம். இவரது மகள் மகாலட்சுமி (30). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மோகனும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
 
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவீட்டாரும் கலந்து பேசி மகாலட்சுமிக்கும், மோகமுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
 
திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்தாலும், மகா லட்சுமியின் வீட்டிற்கு வந்த மோகன் காதலியை நேற்றிரவு  தைலமரக்காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் நீண்ட நேரம் பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மோகன் காதலியைக் கொன்றுள்ளார்.
 
தன்மீது யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக தனக்குத்தானே சில காயங்களை உண்டாக்கிகொண்டார். இதுபற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் கதறி அழுதனர்.
 
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் மோகனிடம் விசாரித்தனர். அப்போது மோகன் கூறியதாவது:
 
நானும், மகாலட்சுமியும் தைல மரக்காட்டில் பேசிக்கொண்டிருந்தபொழுது சில மர்மநபர்கள் என்னைத்தாக்கி விட்டு மகாலட்சுமியை கொன்றுவிட்டனர். என்று கூறியுள்ளார். ஆனால் இவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீஸார் மோகனிடம் தீவிரமாக விசாரித்த பொழுது தான் மகாலட்சுமியை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்றாதாக ஒப்புக்கொண்டார். 
 
இந்தக் கொலையை மறைக்கவே தான் நாடகமாடியதையும் தெரிவித்துள்ளர். இதனையடுத்து போலீஸார் மோகனை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை காதலனே கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பானுப்பிரியா விவகாரம்... திடீர் திருப்பம் .. புகார் கொடுத்த சிறுமியின் தாயார் கைது...!