கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் - ரயில்வே ஸ்டேஷன்: தி.நகர் போல் நடைமேம்பாலம் அமைக்க திட்டம்..!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:29 IST)
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாகத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. 
 
மேலும் இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாகத்தில் ரயில் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக  ரயில்வே துறையும் தமிழக அரசும் இணைந்து திட்டம் தீட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு  நடை மேம்பாலம் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சென்னை தி.நகரில் மாம்பலம் ரயில் நிலையத்திற்கும் தி.நகர் பேருந்து நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது போல கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு இடையே நடைமேம்பஃஅலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடக்கப்படும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments