பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (12:02 IST)
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 
1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2,310 பேருந்துகள் இயக்கப்படும். 
 
பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என  அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
 
 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக தென் மாவட்ட பேருந்துகளுக்கு என தனியாக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த பேருந்து நிலையத்தில் சமீபத்தில் பேருந்துகளை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments