Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கி. வீரமணியின் சாதனை - பிறந்தநாள் பகிர்வு

கி. வீரமணியின் சாதனை - பிறந்தநாள் பகிர்வு
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (12:05 IST)

திராவிடர் இயக்கத்தின் தற்போதைய தலைவரும் மூத்த அரையல்வாதியுமான கி. வீரமணி அவர்கள் இன்று தனது 85 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
 

தமிழ்நாட்டில் வாக்கரசியல் சாராத இயக்கங்களில் முக்கியமானதும் முத்ன்மையானதுமான இயக்கம் திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் அவர்களால் 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமூகநீதி இயக்கமான திராவிடர் கழகம் சமூக நீதிக்கான இயக்கமாக தமிழகத்தில் வளர்ந்துள்ளது.

அதிலிருந்து பிரிந்து சென்ற திமுக, பின்பு திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக என திராவிடப் பின்புலம் கொண்ட அரசியல் கட்சிகளே தமிழ்நாட்டைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வருகின்றனர். இந்த அரசியல் மாற்றத்திற்கு விதைப் போட்டது திராவிடர் கழகம் என்றால் அது மிகையாகாது.

பெரியாரின் இறப்பிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று கி. வீரமணி செயல்பட்டு வருகிறார். பெரியாரின் இறப்பிற்குப் பின் தி.க. பழைய மாதிரி செயல்படுவது இல்லை என்று எதிர் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் வாக்கரசியலில் இல்லாத ஒரு இயக்கம் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவதே ஒரு சாதனைதான்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் வீரமணி்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள திராவிடர் கழகப் பேச்சாளரும், வழக்கறிஞருமான அருள்மொழி அண்ணாமலை அவர்கள் வீரமணி அவர்கள் தமிழக அரசியலில் நடத்திய முக்கியமான சாதனை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது முகநூல் பதிவில் ‘ 1992 நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. மண்டல் கமிஷன் பரிந்துரையை இந்திய அரசு ஏறறுக்கொண்டு மத்திய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரதமர் வி. பி.சிங் அவர்களின் அறிவிப்பை எதிர்த்து இந்திரா சஹானி என்பவர் தொடுத்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் சேர்ந்த அரசியல்சாசன அமர்வு தான் (Constitutional Bench ) அந்தத் தீர்ப்பை வழங்கியது.

அத்தீர்ப்பில் , பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவென்று ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம் .ஆனால் மொத்த இட ஒதுக்கீடும் 50 சதவீதத்துக்கு மேல் தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது . நாள் 16.11.1992

ஏற்கனவே இட ஒதுக்கீடு கொடுக்காத அல்லது குறைந்த அளவே கொடுத்து வந்த மாநிலங்களுக்கு இந்தத் தீர்ப்பால் பிரச்சனையில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த 69 சதவீத இட ஒதுக்கீடு இனி 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற நிலை ஏற்பட்டது.

அந்தப்பெரும் தடையை தனது சட்ட அறிவால் சமுதாயப் பணி கொடுத்த பட்டறிவால் உடைத்து தனிச்சட்டம் உருவாக்கிக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசியல்சாசனத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்த்தது ஆசிரியர் கி.வீரமணி MABLஅவர்களின் தனிப்பெரும் சாதனையாகும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் அய்யா.' எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக அரசு நிராகரித்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கும் தமிழக அரசு?