Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்புவுக்கு பேச அருகதை இல்லை: வெளுத்து வாங்கிய நடிகை நக்மா!

குஷ்புவுக்கு பேச அருகதை இல்லை: வெளுத்து வாங்கிய நடிகை நக்மா!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (15:35 IST)
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமீபத்தில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பேசினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்புவுக்கு பொது சிவில் சட்டத்தை பற்றி பேச அருகதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவி நடிகை நக்மா கூறியுள்ளார்.


 
 
இது குறித்து நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நக்மா, பொதுசிவில் சட்டம் பற்றி கருத்து சொல்ல குஷ்புவிற்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமாக பிறந்த அவர், சினிமாவில் பொட்டு வைத்து நடித்தார்.
 
ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அதனையே செய்கிறார். காரணம் தான் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளதாக கூறுகிறார். அப்படியானால் வேறொரு மதத்தை பின்பற்றிக் கொண்டு ஏன் முஸ்லீம்களின் ஷரியத் சட்டம் பற்றி பேச வேண்டும் என்றார் காட்டமாக.
 
தொடர்ந்து பேசிய நக்மா, குஷ்புவுக்கு மாவட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் மாலையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அண்ணா மக்கள் பணி செய்து நான் பார்க்கவே இல்லை: திவ்யா சத்யராஜ்

திடீரென நண்பர்களாக மாறிய கவர்னர் - முதல்வர்.. அரசியல் கட்சிகள் ஆச்சரியம்..!

திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! யாருக்கெல்லாம் அனுமதி இல்லை?

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் விவரங்கள்..!

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம்: தி.மு.க. என்றால் கொம்பு முளைத்தவர்களா? ஈபிஸ் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments