Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக பாண்டிச்சேரியில் ஆன்லைன் வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல்முறையாக பாண்டிச்சேரியில் ஆன்லைன் வாக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (13:37 IST)
இந்தியாவில் முதல் முறையாக, பாண்டிச்சேரியில் உள்ள நெல்லித் தோப்பு பகுதியில், ஆன்லைன் வாக்குப்பதிவை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
இதுகுறித்து தலைமை சேர்தல் அதிகாரி திரேந்திர ஓஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
“தேர்தல் பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் செலுத்தும் வாக்குகள், தபால் மூலம் பெறப்பட்டு வருகிறது. இது நேரத்தை வீணாக்குவதோடு, தேர்தல் நடவடிக்கையில் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது.
 
எனவே இதையும் மின்னணு தொழில்நுட்பத்துக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ‘எலக்ட்ரானிக் டிரான்ஸ்மிட்டட் போஸ்டல் பேலட்’ என்ற முறை தயார் செய்யப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பதிவிறக்கம் செய்யக்கூடிய தபால் ஓட்டை, தேர்தல் பணியாளர் ‘ஒன் டைம் பாஸ்வர்டு’ (ஓ.டி.பி.) மற்றும் அடையாள எண் மூலம் பெற வேண்டும். பதிவு செய்யப்படும் வாக்குகளை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி பெற்றுக்கொள்வார்” என்று கூறப்படுள்ளது.
 
அதன்படி, நெல்லித்தோப்பு தொகுதியில் வசிக்கும், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் இடைத்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments