நக்கத் கான் ஆக மாறிய குஷ்பு? காரணம் பாஜகவினர்

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (09:07 IST)
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு, டுவிட்டரில் இதுவரை குஷ்பு சுந்தர் என்றே தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் நேற்று முதல் அவர் திடீரென நக்கத்கான் என்று பெயரை மாற்றி இந்த பெயர் பாஜகவினர்களுக்காக என்று பதிவு செய்துள்ளார்.
 
கடந்த சிலநாட்களாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்திதொடர்பாளரான குஷ்பு, பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ஆசிபா குறித்து குஷ்பு கூறிய கடுமையான விமர்சனம் பாஜகவினர்களை எரிச்சலை தந்தது.
 
இதனால் பதிலுக்க்கு குஷ்புவை வெறுப்பேற்ற குஷ்புவின் இயற்பெயரான நக்கத் கான் என்ற பெயரை டுவிட்டரில் கூறி அவரை கிண்டல் செய்தனர். இதற்கு பதில் கூறிய குஷ்பு, 'பாஜகவினர் இப்போதுதான் என் இயற்பெயரை கண்டுபிடித்துள்ளனர். நான் என் இயற்பெயரை என்றுமே மறைத்ததில்லை என்று கூறியதோடு, தன்னுடைய டுவிட்டரின் டிபியில் 'நக்கத்கான்' என்று பெயரை மாற்றி இந்த பெயர் பாஜகவினர்களுக்கு மட்டும் என்று கூறியுள்ளார். குஷ்புவின் இந்த அதிரடியை அவரது ஃபாலோயர்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments