நிர்மலாதேவி விவகாரத்தில் தன்னுடைய பெயர் அடிபடுவது குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். இந்த சந்திப்பின்போது நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். அதற்கு கவர்னரும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து கவர்னர் எழுந்து சென்ற போது பெண் நிருபர் ஒருவர் கவர்னரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதில் கூறாமல் கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டிய கவர்னர், நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறி சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நிருபர் தனது டுவிட்டரில் காட்டமாக கவர்னரை விமர்சனம் செய்துள்ளார். என் தாத்தா வயதில் இருந்தாலும் என்னுடைய அனுமதியின்றி அவர் என்னை தொட்டது தவறு. அவருக்கு வேண்டுமானால் இது சாதாரணமாக இருக்கலாம், ஆனால் என்னை பொருத்தவரையில் இது ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளார். இதனால் இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.