Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுக்கு தாவ தயரா இருக்கீங்க போல? – கேள்வி கேட்டவரை ஆஃப் செய்த குஷ்பூ!

Tamilnadu
Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:55 IST)
நேற்று ஆசிரியர் தினத்தில் கலைஞர் குறித்த குஷ்பூவின் ட்வீட் குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குஷ்பூ பதிலளித்துள்ளார்.

ஆரம்பத்தில் திமுகவில் இருந்தாலும், பின்னர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்து தற்போது பாஜக கட்சியில் பொறுப்பு வகித்து வருபவர் நடிகை குஷ்பூ.

நேற்று ஆசிரியர்கள் தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்ட நடிகை குஷ்பூ “இந்த ஆசிரியர் தினத்தில் எனது சிறந்த ஆசிரியரும், வழிகாட்டியுமான டாக்டர் கலைஞருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் என்பது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல, மாறாக நம்பிக்கையும், சேவையும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்ததற்காக..” என கூறியுள்ளார்.

இதற்கு கமெண்டில் வந்து கேள்வி எழுப்பிய நபர் ஒருவர் “திமுகவுக்கு தாவ தயாரகிட்டீங்க போல..” என கேட்க, அதற்கு பதிலளித்துள்ள நடிகை குஷ்பூ “கடவுளே.. அம்மா உங்களுக்கு குரு மரியாதை சொல்லி குடுக்கல. பாவம் நீங்க. இதுதான் கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments