Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

Advertiesment
அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

Siva

, புதன், 26 ஜூன் 2024 (17:36 IST)
கேரள அரசு சார்பில் முதல் முறையாக அரசு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் கார் மற்றும் பைக் ஓட்டுவதற்கு பயிற்சி கட்டணம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தனியார் தான் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் இன்று மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரத்தில் இந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளியை முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பயிற்சிக்காக 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கார் மட்டும் கற்றுக் கொள்ள விரும்பினால் அதற்கு ரூ.9000 என்றும் பைக் பயிற்சிக்கு மட்டும் பயிற்சி கொள்ள விரும்பினால் ரூ.3500 கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பட்டியலின பழங்குடி பிரிவை சேர்ந்தவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 23 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்க கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் கழகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!