தமிழ்நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையில் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவ கேரள அரசு முன்வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சரியான அளவு மழை பெய்யாததுதான் காரணம் என தமிழக முதல்வர் சொன்னாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததே காரணம் என பலர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மக்களின் தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலம் வழங்க கேரளா அரசு முன்வந்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால் இப்போது எங்களுக்கு தண்ணீர் தேவையில்லை என தமிழக முதல்வர் அலுவலகம் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கேரளா வெள்ளத்தின் போது தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் குடிதண்ணீர் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் மனமுவந்து பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.