Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஆர்வமாக வந்து பார்க்கும் கீழடி அகழ்வாராய்ச்சி மையம் – சுற்றுலாத் தளமாக மாற்ற கோரிக்கை !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (09:31 IST)
கீழடியில் ஐந்து கட்டத்தில் நடந்துள்ள அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை மக்கள் ஆர்வமாக வந்து பார்த்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

கீழடியில் ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சி நடந்து முடிந்துள்ள நிலையில்  தமிழர்களின் பண்டைய பொருட்களான மண் பானை, முதுமக்கள் தாழி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சங்ககால நாகரீகத்துக்கான சான்றாக கருதப்படுகிறது. அவற்றினை கரிம சோதனை செய்த போது  2600 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர் நாகரீகம் கீழடியில் உருவாகி வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கு நடந்த முதல் மூன்று அகழாய்வுப் பணிகளில் 7,818 தொல்பொருட்களும். நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதையடுத்து அந்த இடத்தை வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள் தொல்லியல் மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழடி தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதனால் அப்பகுதியைக் காண மக்கள் அதிகமாக வர ஆரம்பித்துள்ளனர். மேலும் அந்த இடத்தை சுற்றுலாத் தளமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கீழடியில் நடக்க இருந்த ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மழைக் காரணமாக தாமதாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments