Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்கபூர்வமான அரசியல்: நாம் தமிழர் கட்சிக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து..

Advertiesment
ஆக்கபூர்வமான அரசியல்: நாம் தமிழர் கட்சிக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து..

Mahendran

, புதன், 5 ஜூன் 2024 (11:15 IST)
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் இழந்தபோதிலும் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி நாம் தமிழர் கட்சிக்கும், அக்கட்சியின் தலைவர் சீமானுக்கும் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது:
 
ஆளும் கட்சி தயவு இல்லை.
யாருடனும் கூட்டணி இல்லை.
சின்னத்தை பறித்துவிட்டார்கள்.
மத்திய மாநில அரசு அச்சுறுத்தல். NIA மூலம் முடக்க முயற்சி.
வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. டிவி பேப்பர் விளம்பரமில்லை.
 
பல தொகுதிகளில் பிஜேபி அதிமுகவை பின் தள்ளியுள்ளது நாம்தமிழர் !
 
நேர்மையான ஆக்கபூர்வமான அனைவருக்குமான அரசியலை தமிழகத்தில் 8.9 சதவிகிதம் வரவேற்றுள்ளார்கள் என்பதை எண்ணும்போது எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை வருகிறது. சின்னம் மாறாதிருந்தால் இன்னும் அதிகம் வாக்கு கிடைத்திருக்கும். 
தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள். 
 
இனி மைக் சின்னம் நிரந்தரம். ECI தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தாயிற்று. வாழ்த்துக்கள். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆணவத்தில் பேசியவர்களுக்கு தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது- கார்த்திக் ப.சிதம்பரம்!