Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலியின் அரசியல் வருகையை கலாய்த்த கஸ்தூரி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (11:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆன ஜூலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இரண்டு வீடியோக்களில் அவர் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் டுவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவரை 'நீ வா தலைவி அரசியலுக்கு' என்று சிலர் கலாய்த்து வந்தனர்.
 
இந்த நிலையில் அரசியல் நையாண்டி கருத்துக்களில் எக்ஸ்பர்ட் ஆன நடிகை கஸ்தூரி, ஜூலியை தனது பாணியில் கலாய்த்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன்  தெரிவித்துக்கொண்டு.. என்று முடித்துள்ளார்.
 
கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் ஜூலிக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கமெண்ட் அளித்துள்ளனர். அதில் ஒருவர், 'இன்னைக்கு வேணும்ன்னா ஜூலிய நீங்க கலாய்க்கலாம். அன்னைக்கு மெரீனாவுல அந்த பொண்னு போராடுன போராட்டத்த இத்தனை வருட சினிமா வாழ்க்கையில கஸ்தூரி செய்ததது உண்டா??? போராட்டம் பண்ணி பிரபலமானவள் அவள்' என்று கூறியுள்ளார். இன்னொரு டுவிட்டர் பயனாளியோ இரண்டு பேரையும் கலாய்த்து, 'இதுல கலாய்க்க என்ன இருக்கு ரெண்டு பேருமே  ஒன்னு தானே!!! யாரும் யாரை விட பெரியவரோ சிரியவரோ அல்ல!!! ரெண்டு பேருமே கூத்தாடி தட்ஸ் ஆல். என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments