Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக திமிர் பேச்சுக்கள்.. கதிர் ஆனந்த் பவுடர் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி..!

Advertiesment
திமுக திமிர் பேச்சுக்கள்.. கதிர் ஆனந்த் பவுடர் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி..!

Siva

, வெள்ளி, 29 மார்ச் 2024 (14:15 IST)
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எல்லோரும் பளபளப்பாக பவுடர் பூசி இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா என்று கேட்டது பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவின் திமிர் பேச்சு என்று கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி கூட கதிர் ஆனந்துக்கு வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கதிர் ஆனந்த் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது எல்லா பெண்களும் பவுடர் ஃபேரன் லவ்லி போட்டு பளபளப்பாக இருக்கிறீர்கள், ஆயிரம் ரூபாய் வந்து விட்டதா என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

திமுக திமிர் பேச்சுக்கள்:
 ஓசி பஸ்
 make up , powder பளபள....
அடுத்தது loading !
பெண்களை ம(மி)திக்கும் திமுக.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழில் நகரத்தை முடக்கிய மத்திய மாநில அரசுகள்..! திருமதி பிரேமலதா..!!