Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் டீம் மொத்தமா இறங்கியிருக்கு ; எலுமினேஷன் உண்டா? - கஸ்தூரி நக்கல்

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (12:49 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதேபோல், மதுரை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் அந்த மேடையில் பேசினார். மேலும், நடிகர் வையாபுரியும் கமலுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்த நடிகை ஸ்ரீப்ரியா கமலின் கட்சியில் இணைந்துள்ளார்.

 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “ சினேகன், வையாபுரி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன். மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு. எலுமினேஷன் கூட வரும்ல?” எனக் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments