உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.32 லட்சம்.. யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்?

Siva
ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (12:18 IST)
கரூரில் நடந்த துயர சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு ₹10 லட்சம் அறிவித்திருந்த நிலையில், சற்றுமுன் விஜய் ₹20 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்தார்.
 
இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் தனது நிதியுதவி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, கரூரில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக ₹32 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், பிரச்சாரம் நடைபெற்ற இடத்தின் சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments