கரூர் எஸ்பி மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (21:45 IST)
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி கரூர் எஸ்பி ராஜசேகரன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜசேகரன் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விக்ரமன் என்பவர் கரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சற்றுமுன் உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.
 
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிடும் நிலையில் அவரை தோற்கடிக்க அதிமுகவும், அமமுகவும் தீவிர திட்டம் தீட்டியுள்ளன. இந்த நிலையில் எஸ்பி மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்ரமன் இதற்கு முன்னர் டிஜிபி அலுவலகத்தில் கணிணிமயமாக்கல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்!.. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்....

ஓபிஎஸ் ஆதரவோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்!.. சட்டசபையில் சிரிப்பலை!...

அந்த பயம் இருக்குவரை ஆட்சி செய்வது ஸ்டாலின்தான்!.. தங்கம் தென்னரசு ராக்ஸ்!...

நெருங்கும் தேர்தல்!.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு..

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா?.. கண்டுபிடிச்சது என்ன?.. அமெரிக்கா எல்லாத்தையும் சொல்லப்போறாங்களாம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments