Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் அருகே காவலாளிகள் கடத்தல் வழக்கு: இதுவரை 26 பேர் கைது

கரூர் அருகே காவலாளிகள் கடத்தல் வழக்கு: 26 பேர் கைது

கரூர் அருகே காவலாளிகள் கடத்தல் வழக்கு: இதுவரை 26 பேர் கைது
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (18:25 IST)
கரூர் அருகே வீரராக்கியம் பிரிவு பகுதியைச்  சேர்ந்தவர்  சாமியப்பன்  (67). அதே பகுதியில் பால் பண்ணை  நடத்தி  வரும்  இவர்  கடந்த 3 -ம்  தேதி அதிகாலை வீட்டுக்குள்  மகன் ஆனந்த்  மற்றும்  குடும்பத்தினருடன்  தூங்கிக்  கொண்டிருந்தார்.  


 

 
வீட்டைப்  பாதுகாக்கும்  பணியில்  கரூர்  பஞ்சப்பட்டி  அழகுராஜ் (35),  வீரராக்கியம்  கந்தசாமி (60),  திம்மாச்சிபுரம் சாமிநாதன் (30) ஆகியோர்  ஈடுபட்டிருந்தனர். 
 
இந்நிலையில் 3 ம் தேதி அதிகாலையில்  வேனில்  வந்த  முகமூடி  அணிந்த  மர்ம  கும்பல் ஒன்று திடீரென சாமியப்பனின்  வீட்டின்  முன்  நின்றிருந்த  காவலாளிகள் மூவரையும் தாக்கி, வேனில் கடத்திச்சென்று ரூ. 50 கோடி கேட்டு சாமியப்பனுக்கு மிரட்டல் விடுத்தனர். 
 
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகளான திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா (29), அன்பரசு (22), தேனியைச் சேர்ந்த விஜயரகுநாதன் (29), அருண்(27) ஆகிய 4 பேரை கைது செய்து காவலாளிகள் 3 பேரையும்  மீட்டனர்.  
 
இதுவரை குற்றவாளிகள் 26 பேர் கைது செய்யப்பட்டு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து  4 கார்கள் உள்பட ஒரு மோட்டார் சைக்கிள் என மொத்தம் 5  வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்  செய்யப்பட்டன.
 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனி நபர் உரிமைகளை மீறும் விக்கிலீக்ஸ்: விசாரணையில் தகவல்