Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு

கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு

Advertiesment
கரூர் அருகே மணல்குவாரி அமைக்க கோரி மனு
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (19:07 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி, நடையனூர் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் நதி நீர் பாயவில்லை.


 

 
கடந்த தி.மு.க ஆட்சியில் அளவுக்கு அதிகமாக நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தின் அக்கறையான க.பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் எடுத்ததால் காவிரியின் நதி நீர் அப்பகுதியில் மட்டுமே பாய்ந்து வருகின்றது. 
 
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிக்கு காவிரியின் நதிநீர் வரவில்லை. இந்நிலையில் தற்போது விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ள 15 ஆயிரம் டி.எம்.சி குடிநீர் தங்களுக்கு வரவேண்டுமென்றும், அதற்கு ஏற்கனவே எங்கள் பகுதியில் கொண்டு வர இருந்த அரசுப் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகள் அமைத்து அந்த மணல் திட்டை அப்புறப்படுத்துவதோடு, எங்கள் கரையோரங்களிலும், காவிரியின் நதிநீரை கொண்டு வர வேண்டுமென்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. 
 
முன்னதாக தங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் முகிலன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டது. 

webdunia

 

 
இந்த திடீர் ஆர்பாட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் காவிரி நதியில் சுமார் ½ கி.மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று தான் காவிரி நீரை உபயோகித்து வந்ததாகவும், இந்த மணல் திட்டை எடுத்தால் மட்டுமே எங்கள் பகுதிக்கும் காவிரி நதி பாயும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
 
மேலும் ஊருக்கு சம்பந்தமில்லாதவர்கள், ஊருக்கு நல்லது செய்வதாக அரசையும், அரசியல் கட்சிகளையும் விரட்டி பணம் சம்பாதிப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தமிழக அளவில் மணல் குவாரி அமைக்க வேண்டாம் என்று மனு கொடுத்து வரும் நிலையில், கருர் மாவட்டத்தில்  மணல் குவாரி அமைக்க வேண்டி மனு கொடுத்த சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல் கொள்முதலுக்கு அதிகாரிக்கு லஞ்சம்: பரபரப்பு ஆடியோ