செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கரூர் தொகுதியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வரும் நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிட பிரபல தலைகள் பின் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அதிமுக சார்பில் விருப்பமனு பெறப்பட்டு வரும் நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிட இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி இது குறித்து ஆர்வம் காட்டி சிலரிடம் நீங்கள் கரூர் தொகுதியில் போட்டியிடுங்கள் என்று சொன்னபோது அவர்கள் நாசுக்காக மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கரூர் தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட தம்பிதுரை இடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அதை விட்டுவிட்டு வர முடியாது என்று கூறிவிட்டாராம்
அதேபோல் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை போட்டியிடச் சொன்னபோது தனக்கு மாநில அரசியல் போதும், மத்திய அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்
இந்த நிலையில் கரூரில் செல்வாக்குடன் இருக்கும் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி இடம் பேசிய போது தன்னால் செலவு செய்ய முடியாது என்றும் மொத்த செலவும் தலைமை ஏற்றுக் கொண்டால் போட்டியிட தயார் என்று கூறினாராம்
இதனால் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பணப்பசை உள்ள ஒரு நபரை கரூர் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.