கரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடியது - பயணிகள் அவதி !!.

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (23:43 IST)
கரூர் பேருந்து நிலையத்திற்கு இன்று ஒரு நாள் தனியார் பேருந்துகள் ஆப்செண்ட் - முதல்வர் நிகழ்ச்சிக்காக கட்சி நிர்வாகிகளை ஊர், ஊராக அழைத்து செல்ல சென்றதால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது - பல்வேறு ஊர்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதி.
 
கரூர் மாநகருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று இரவு கரூருக்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10  மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய பகுதிகளில் ஓடி வந்த தனியார் பேருந்துகள், தனியார் கல்லூரி பேருந்துகள், பள்ளி பேருந்துகள் என்று பலதரப்பட்ட பேருந்துகள் கட்சி நிர்வாகிகளை அழைத்து செல்வதற்காக சென்றதையடுத்து கரூர் பேருந்து நிலையம் வெறிச்சோடியது, இது மட்டுமில்லாமல், அந்த தனியார் பேருந்துகளுக்கு மாற்றாக, மாற்று ஏற்பாடாக பேருந்துகள் ஏதும் மாற்று ஏற்பாடு செய்யாத நிலையில் பேருந்துகள் கிடைக்காமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர், ஒரு சில டவுன் பஸ்களில் பயணிகள் தொங்கிய படியே, பயணிகள் பயணித்தனர். முதல்வர் கரூர் வந்தையடுத்தும் எங்களுக்கு இந்த நிலையா ? என்று முனுமுனுத்தபடி, பேருந்தில் பயணிகள் பயணித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? இன்றைய ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments