Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா அணியை ஆதரிக்க ரூ.5 கோடி வாங்கினாரா கருணாஸ்? அதிர்ச்சி தகவல்

, புதன், 29 மார்ச் 2017 (22:33 IST)
நடிகர் கருணாஸ் தான் நடிக்கும் படங்களில் செய்யும் காமெடிகளைத்தான் தனது அமைப்பிலும் செய்து கொண்டிருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். திடீரென கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் யாருடைய ஆலோசனையும் இன்றி நீக்கினார். இது நடந்த ஒருசில நாட்களில் நிர்வாகிகள் கருணாஸை அமைப்பில் இருந்து நீக்கியுள்ளனர். என்னதான் நடக்குது முக்குலத்தோர் புலிப்படையில்...


 


இந்நிலையில் சசிகலா அணியை ஆதரிப்பதற்காக ரூ.5 கோடியை கருணாஸ் பெற்றதாக திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகின்றனர் முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள்

இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்த பாண்டித்துரை கூறியபோது, 'கூவத்தூர் பங்களாவில் கருணாஸ் இருந்தபோது புலிப்படையின் நிர்வாகிகளை அழைத்ததாகவும், சசிகலா தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்துவிட்டதாகவும் கூறியதாக தெரிவித்தனர். ஆனால் கருணாஸ் உண்மையில் ஐந்து கோடி ரூபாய் பெற்றதாகவும், அதை மறைத்துவிட்டு தங்களிடம் ஒருகோடி தான் பெற்றதாக கருணாஸ் பொய் கூறியதாகவும் பாண்டித்துரை கூறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் தாய்ப்பால் விற்கும் 20 வயது இளம்பெண்: நேரடி சேவை கிடைக்குமா?