Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியுடன் செல்பி - கலக்கல் கருணாநிதி

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (16:40 IST)
திமுக தலைவர் கருணாநிதி தனது மகளும் திமுக எம்.பி.யுமான கனிமொழியுடன் எடுத்த செல்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வந்த பிரதமர் மோடி, அதன் பின் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். 
 
மோடியை திமுக செயல் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார். அருகில் கனிமொழி, துரை முருகன் ஆகியோர் இருந்தனர். கருணாநிதியின் கைகளை பிடித்துக்கொண்ட மோடி, ஓய்வு எடுக்க டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்த மோடி அதன் பின் அங்கிருந்து கிளம்பி சென்றார். 
 
அதன்பின் தொண்டர்களை பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார் கருணாநிதி. அந்த வீடியோவும் வெளியாகி திமுகவினரை ஆர்ப்பரிக்க செய்தது.
 
இந்நிலையில், அப்போது கருணாநிதியுடன் கனிமொழி எடுத்த ஒரு செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், சிரித்த முகத்தோடு கருணாநிதி காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments