Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதி விரைவில் பேசுவார்- அழகிரி பேட்டி

Advertiesment
கருணாநிதி விரைவில் பேசுவார்-  அழகிரி பேட்டி
, புதன், 1 நவம்பர் 2017 (13:48 IST)
திமுக-வில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கி விட்டதால், அரசியல் மற்றும் திமுகவை விட்டு அழகிரி சற்று தள்ளியே இருக்கிறார். கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டசபையில் அவர் அடியெடுத்து வைத்த நாளை வைரவிழா கொண்டாட்டம் என்கிற பெயரில் திமுக கொண்டாடியது. அதில் கூட அழகிரி பங்கேற்கவில்லை.
 



 

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித் மற்றும் விக்ரம் மகள் அக்ஷிதா திருமணத்தை தனது கோபாலபுரம் வீட்டில் நடத்தி வைத்தார். இதில், அழகிரியும் அவரது மகன் தயாநிதியும் கலந்து கொண்டனர். அப்போது தந்தை கருணாநிதியை அழகிரி சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இந்த சூழ்நிலையில் அழகிரி இன்று விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவர் விரைவில் பேசுவார் என்றும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூதாட்டியை கொலை செய்த வழக்கு ; திருமணமான 3 நாளில் இளம்பெண் சிறையில் அடைப்பு