Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் நடராஜன்: சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு!

அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் நடராஜன்: சசிகலா புஷ்பா பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (09:51 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சதி செய்து சசிகலாவின் குடும்பத்தினர் கஸ்டடியில் வைத்திருந்ததாகவும். அவரை விசாரிக்க வேண்டும் எனவும். இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கூறிய சசிகலா புஷ்பா தற்போது மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளார்.


 
 
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்து மனு கொடுத்த சசிகலா புஷ்பா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களிடத்தில் சந்தேகம் உள்ளது.
 
அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளியே கொண்டுவர வேண்டும். முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருடன் சசிகலா மட்டுமே இருந்தார். ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய வி.வி.ஐ.பி.க்கள் வந்தபோதும் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.
 
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது எடுத்த போட்டோ கூட வெளியிடப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள பன்னீர் செல்வத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். தற்போது அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும் திட்டமிட்டு இறங்கியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச் சூடு: 30 குண்டுகள் வீட்டை நோக்கி பாய்ந்ததால் பரபரப்பு..!

திடீரென பத்மநாப சுவாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. என்ன காரணம்?

நாய்களோ அப்பாவி.. இரக்கமோ நமது மொழி.. சென்னையில் விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்..!

பாஜக ஆளும் மாநிலங்கள்ல போய் கம்பு சுத்துங்க! - ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments