Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியின் கன்னிப் பேச்சு கண்ணீர் பேச்சாக அமைந்தது - ஸ்டாலின்

கருணாநிதியின் கன்னிப் பேச்சு கண்ணீர் பேச்சாக அமைந்தது - ஸ்டாலின்
, செவ்வாய், 10 மே 2016 (11:57 IST)
கருணாநிதி முதல் முதலாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த போது முதல் கன்னிப் பேச்சாக நங்கவரம் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து தான் பேசினார். அவரது கன்னிப் பேச்சு கண்ணீர் பேச்சாக அமைந்தது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆதரவாக கொரடாச்சேரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய ஸ்டாலின், ”தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். திடீர் தலைவர்கள் உருவாகலாம். அவர்களை பேசி விளம்பரப்படுத்தவோ, அவர்களை பெயரை கூறி என்னுடைய தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
 
ஜெயலலிதா நாட்டையும், மக்கள் பிரச்னையை பற்றி சிந்திப்பதே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டையும், மக்களையும் பற்றி சிந்திப்பவர் கலைஞர்.
 
தேரோடும் திருவாரூர் வீதியில், தெருவில் தமிழ்க்கொடியேந்தி போர்ப்பரணி பாடிய, இந்த மண்ணுக்குச் சொந்தக்காரான திமுக தலைவர் கலைஞர் இத்தொகுதியில் வேட்பாளராக உள்ளார்.
 
1957-ல் முதல் முதலாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைந்த போது முதல் கன்னிப் பேச்சாக நங்கவரம் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து தான் பேசினார். அவரது கன்னிப் பேச்சு கண்ணீர் பேச்சாக அமைந்தது.
 
எம்ஜிஆர் ஆட்சியில் இலவச மின்சாரத்துக்கு 1 பைசா குறைக்கோரி போராடிய விவசாயிகள் தாக்கப்பட்டனர். விவசாயிகளின் நிலையை அறிந்த கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மின்சாரத்தை வழங்கினார்.
 
1969-1976 வரை ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை புதுப்பித்து ஓடவைத்தார். தொடர்ந்து திருவாரூருக்கு அரசு மருத்துவமனை, அரசுக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மடிப்பாக்கம் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி