கருணாநிதியின் மூளையில் பாதிப்பா?: என்ன சொல்கிறது சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட்!
கருணாநிதியின் மூளையில் பாதிப்பா?: என்ன சொல்கிறது சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட்!
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி பின்னர் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட அவர் கடந்த 15-ஆம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று இருப்பதாக கூறியது மருத்துவமனை நிர்வாகம்.
இதனையடுத்து அவரின் மூளையில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க கடந்த சனிக்கிழமை அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்தனர் மருத்துவர்கள். சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து விவாதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு மூளையில் எந்த பாதிப்பும் இல்லை என அவரது குடும்பத்தினரிடம் கூறினர்.
இதனை கேட்ட திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பமும் முன்னாள் திமுக அமைச்சர்களும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும் அடுத்ததாக அவருக்கு நினைவாற்றலும் பேச்சும் இயல்பாக வருவதற்கு என்ன சிகிச்சை அளிக்கலாம் என்பதை மருத்துவர்கள் குழு ஆலோசித்து வருகிறது.