Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி: வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (01:43 IST)
திமுக  தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் கருணாநிதி தனது பேரனின் மகனுடன் அதாவது மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. கருணாநிதி தனது வீல்சேரில் உட்கார்ந்து கொண்டு பந்து வீச அதனை அவரது கொள்ளுப்பேரன் பேட்டினால் அடிக்கும் காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவில் இருந்து கருணாநிதியின் உடல்நலை நன்கு தேறி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போட்டி பஹல்காம் தியாகத்தின் அவமானம்! - இறந்தவரின் மனைவி வேதனை!

புரிய வேண்டியவங்களுக்கு புரியும்! இபிஎஸ்க்கு செங்கோட்டையன் சூசக செய்தி!

இளையராஜா விழாவா? மது விளம்பர விழாவா? ரஜினி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்..!

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்.. தமிழக அரசு ஏற்பாடு..!

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? குழப்பத்தில் தொடங்கிய வர்த்தகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments