Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவில் சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு

சிவில் சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு

சிவில் சட்டத்திற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு
, திங்கள், 4 ஜூலை 2016 (23:29 IST)
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நமது நாட்டில், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும்போது; பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித் துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நாள்தோறும் பெருகி வரும் போது; பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத - சிக்கலான பிரச்சினையைக் கையிலெடுக்க முயற்சிப்பது குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும்.
 
முஸ்லீம் மதத்தில் விவாக ரத்து செய்யும் “தலாக்” நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றம், அண்மையில் கருத்து தெரிவித்த போது, தலாக் முறைக்கு அரசமைப்பு ரீதியில் முக்கியத்துவம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியது.
 
இதற்கிடையே நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் அமைப்பு நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது பாஜக விருப்பம். இதை கொண்டு வந்து நடைமுறைப் படுத்துவோம் என அந்தக் கட்சி, தேர்தல் அறிக்கை களில் குறிப்பிட்டுள்ளது.
 
பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையில் சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் சட்டக் கமிஷனின் பரிந்துரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல.
 
பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும், நெடுங்காலப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அனைவர்க்கும் பொது வானதொரு சிவில் சட்டத்தை ஏற்படுத்து வது என்பதும் எளிதான காரியமல்ல என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் மாற்றம்