Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவரா?: அவரே பதில் கூறுகிறார்!

கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவரா?: அவரே பதில் கூறுகிறார்!

கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவரா?: அவரே பதில் கூறுகிறார்!
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:54 IST)
திமுக தலைவர் கருணாநிதி மீது பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று குடும்ப அரசியல். எல்லா தேர்தலின் போதும் பிரச்சாரத்தின் போது மறக்காமல் கூறுவது இந்த குடும்ப அரசியலை தான்.


 
 
90 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் ஆனந்த விகடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் திமுக தலைவர் கருணாநிதியிடம் பல ருசிகரமான கேள்விகளை எழுப்பியது. அதில் குடும்ப அரசியல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியது.
 
அதற்கு பதில் அளித்த கருணாநிதி, நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல.
 
என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய ‘ஆனந்த விகடன்’ வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோ இலவச சேவை டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே! - ட்ராய் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி