தமிழக காங்கிரஸ் தலைவராகிறாரா கார்த்திக் சிதம்பரம்? அண்ணாமலைக்கு போட்டி என தகவல்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (08:23 IST)
தமிழக பாஜக தலைவராக இளைஞரான அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒரு இளைஞரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்
 
இப்போதைக்கு தமிழக காங்கிரஸ் தலைமை பதவிக்கு சரியான நபர் என்றால் அது கார்த்திக் சிதம்பரம் தான் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு தகவல் சென்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் சித்து, தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி ஆகியோர் நியமனம் செய்ததை அடுத்து தமிழகத்திலும் இளைஞர்களை ஈர்க்கும் தலைவரை நியமிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி ஆலோசித்து வருவதாகவும் இதனை அடுத்து விரைவில் கேஎஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு கார்த்திக் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ஜோதிமணி எம்பி உள்ளிட்ட ஒரு சிலர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments