உக்ரைனில் இருந்து வரும் மாணவர்கள் இங்கேயே படிக்க சாத்தியம் உள்ளதா?

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (14:29 IST)
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கார்த்தி சிதம்பரம் பேட்டி. 

 
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், அவர்களை இந்தியாவில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ இடங்கள் குறைவாகவே உள்ளன.
 
கொரோனா முடக்கத்தின் போது சீனாவிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியவில்லை. அவர்கள் அர்மேனியா சென்று மருத்துவப் படிப்பை தொடர்கின்றனர். உக்ரைனில் இருந்து திரும்ப மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர்வதற்கான சாத்தியங்களை இந்திய அரசும் மாநில அரசும் ஆராய வேண்டும்.
 
ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால் சீனாவில் படித்த மாணவர்களைப் போல இந்தியாவுடன் ராஜாங்க ரீதியாக நல்ல உறவை வைத்துள்ள வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது ஒரு அசாத்தியமான சூழ்நிலைதான். உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments